Dietitian Pradeepa

Previous
Next

திருக்குறள் (Thirukkural)

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்ததை அறிந்து பின்பு உண்டானாயின் அவன் உடலுக்கு மருந்து என்று வேறு ஒன்று வேண்டுவதில்லை.

If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.

Thirukkural (941)
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும் குறைந்தாலும் மருத்துவ நூலோர் வகுத்த வாதம்,பித்தம், கபம் முதலிய மூன்றும் நோயைச் செய்யும்.

No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

Thirukkural (942)
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
ஒருவன் முன்பு உண்ட உணவு செரித்த பின்பு உண்பானாக; அவ்வாறு உண்பது பெறற்கரிய மானிட உடம்பைப் பெற்றவன் அதனை நீண்ட காலம் வாழ வைக்கும் வழியாகும்.

If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.

Thirukkural (943)
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து, மாறுபாடு இல்லாத உணவுகளைக் கடைப்பிடித்து அவற்றையும் நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.

(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you).

Thirukkural (944)
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
மாறுபாடு இல்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால் உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் என்பது இல்லை.

There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable.

Thirukkural (945)
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
அளவுக்குச் சிறிது குறையாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பது போல், அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.

As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.

Thirukkural (946)
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
பசித்தீயின் அளவைக் கவனியாமல், காலமும் அளவும் அறியாதபடி, பெருமளவு உண்டால் அவனிடத்தில் எல்லையில்லாமல் நோய்களும் வளரும்.

He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).

Thirukkural (947)
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
நோயைக் குறிகளால் அறிந்து அதற்குரிய காரணத்தைத் தெளிந்து, நோயைத் தீர்க்கும் உபாயங்களையும் அறிந்து மருத்துவன் மருத்துவம் செய்ய வேண்டும்.

Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).

Thirukkural (948)
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், நோயுற்ற காலத்தையும் ஆராய்ந்து மருத்துவம் செய்ய வேண்டும்.

The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).

Thirukkural (949)
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், நோயைப் போக்க வல்ல மருந்து, நோயாளியைக் கண்காணிப்பவன் என மருந்து நான்கு வகைகளை உடையதாகும்.

Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.

Thirukkural (950)
Previous
Next
Our Services & Programmes

We help you to nurture your health

If you would like to improve your health and well-being through better nutrition, we can help with professional and affordable nutrition services